Latest News

November 06, 2014

தனி மாவட்டம் கோருவது நாட்டுப் பிரிவினை அல்ல - ஹசன் அலி
by Unknown - 0

முஸ்லிம்களுக்காக ஒரு தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை இலங்கை பிரதமர் திமு ஜயரட்ண அவர்கள் நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல என்று கூறும் ஹசன் அலி அவர்கள், கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்ததாகக் கூறுகிறார்.
அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் நிலையங்களாகவும் பார்க்கும் ஒரு போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளதாகக் கூறும் ஹசன் அலி அவர்கள் இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த விடயம் குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

நன்றி பிபிசி தமிழோசை  
« PREV
NEXT »