ஏ9 வீதியின் முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோது யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் அவர்கள்மீது இன்று முற்பகல் 9.45 அளவில் மோதியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். விபத்துடன் தொடர்படைய டிப்பர் வாகனத்தின் சாரதி தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Social Buttons