Latest News

October 16, 2014

பாலஸ்தீனம் தனி நாடு தான்! பிரித்தானியாவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
by admin - 0

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரித்தானிய நாடளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

650 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில், பெரும்பாலான எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். 

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 274 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 

இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள தனி நாடாக, பாலஸ்தீனத்தை பிரித்தானிய அரசு அங்கீகரிக்கிறது என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அண்மையில் காஸாவில் நடைபெற்ற போருக்குப் பின்பு,பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட இந்தத் தீர்மானம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்த எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

தீர்மானத்தை ஆதரித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி.களும் வாக்களித்தனர். 

இதேவேளை பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரித்தானிய நாடளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம் இஸ்ரேல் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகளைக் குலைக்கும் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. 

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்படுவதற்கு முன்னரே, பிரித்தானிய நாடளுமன்றம் பாலஸ்தீனத்துக்கு அவசர கதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இந்த அங்கீகாரத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, இஸ்ரேலின் கோரிக்கைகளை பாலஸ்தீன தலைமை உதாசீனப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, இந்தப் பிரச்னையில் அமைதித் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு சீர்குலைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments