Latest News

October 26, 2014

விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சி நிச்சயம், அரசும் கவிழும்: சோதிடர்கள்
by admin - 0

விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி சாத்தியம் என்பதுடன் எதிர்வரும் நாட்களில் தற்போதைய அரசு கவிழ்வது நிச்சயம் என்றும் சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

மவ்பிம (ஞாயிறு ) சிங்களப் பத்திரிகையில் வெளியாகியுள்ள சோதிடர்களின் கருத்துக்களில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்டு இவர்களது கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்போது பிரபல சோதிடர்களான சுமணசிறி பண்டார, எஸ்.ஜே. சமரக்கோன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி நிச்சயம் என்று அடித்துச்சொல்லியுள்ளனர்.

அதே நேரம் சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக அரசாங்கம் கவிழும் நிலைமை இருப்பதாகவும் அவர்கள் சூசகமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளனர். 

1976ம் ஆண்டு, 2001ம் ஆண்டுகளிலும் இவ்வாறான சனிப்பெயர்ச்சியின்போது சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டதை சுமணசிறி பண்டார சுட்டிக்காட்டுகின்றார்.

இம்முறையும் அதேபோன்ற நெருக்கடிகள் மற்றும் ஆட்சியிழப்பு ஏற்படலாம் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

எனினும் அரசாங்கத்துக்கு நெருக்கடி இருப்பதை ஏற்றுக் கொண்டுள்ள சோதிடர் போத்தலகே, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்றும், அதற்குப்பதிலாக சர்வதேச நெருக்கடி சாத்தியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சோதிடர் எஸ்.ஜே. சமரக்கோன் அரசாங்கம் பதவியிழப்புக்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் நெருக்கடியான நீதித்துறை தீர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாகவும் எச்சரித்துள்ளார்.

2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த வெற்றிபெற மாட்டார் என்று 50 சோதிடர்கள் தெரிவித்திருந்தனர். மஹிந்தவுக்கு ஆதரவாக எட்டுப்பேர் மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தனர்.

அவர்களில் எஸ்.ஜே. சமரக்கோன் முக்கியமானவர்.2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவே ஜனாதிபதியாவார் என்றும், இரண்டு தடவைகள் பதவி வகிப்பதுடன், விடுதலைப் புலிகளின் முடிவு குறித்தும் எஸ்.ஜே. சமரக்கோன் தெளிவான எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தார். 

அது மட்டுமன்றி அவரது எதிர்வு கூறலுக்கேற்ப சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், மங்கள-ஸ்ரீபதி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சம்பவம் போன்ற நிகழ்வுகளும் அச்சொட்டாக நடந்து முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments