Latest News

October 27, 2014

போர்குற்ற விசாரணை படிவம் விநியோகித்தவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்றவராம்!
by admin - 0


இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு அனுப்புவதற்கான படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி முழங்காவில் கிராஞ்சியை சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளரான 58 வயதுடைய சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் சனிக்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில்:

போலி தேசிய அடையாள அட்டைகள் இரண்டை வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கிளிநொச்சி இரணைமாதா பகுதியில் வைத்து குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்றவராம்!

எனினும் சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத நிலையில் முழங்காவில் பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முழங்காவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  உடனடியாக அவரை வவுனியாவுக்கு கொண்டுசென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசார், மேலதிக விசாரணைக்காகவெனக் கூறி சின்னையா கிருஷ்ணராஜாவை கொழும்புக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.

இதற்கமைய இவரும் பயங்கரவாதத் தடுப்புச் கட்டளைக் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் தடுத்துவைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய உணர்வாளர் சின்னையா கிருஷ்ணராஜா விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற்றவர் எனக் கதை  கூறி அவர்  மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம்  கங்கணம்  கட்டி நிகின்றது.

அவரை  உடனடியாக விடிவிக்க  தமிழ் தேசியக்  கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் , அமைப்புகள்  குரல் கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments