Latest News

October 02, 2014

மகிந்த ஊரில் மான் இறைச்சிக்குள் நாய் இறைச்சி கலந்து விற்பனை
by admin - 0

ஹம்பாந்தோட்டையில்  மான் இறைச்சிக்குள் நாய் இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படுவதாக வனப்பாதுகாப்புத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.   குறித்த பிரதேசத்தில் தற்போது  நிலவும் கடும் வரட்சி காரணமாக குடி தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதுடன்இ நீர் நிலைகளும் வற்றியுள்ளன.   இந்நிலையில் நீரைத் தேடி வரும் மான் உள்ளிட்ட காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்துவரும் நடவடிக்கையில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.   இவர்கள் அதிக வருமானம் ஈட்டும் மான் இறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.   ஹம்பாந்தோட்டை தம்மென்னாவை குளக்கரையோரம் அவ்வாறு இறைச்சிக்காக கொல்லப்பட்ட நாய்களின் தலைகள் மற்றும் கால் பகுதிகளை வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.   இதற்கிடையே சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் மான் இறைச்சியில் நாய் இறைச்சியைக் கலந்து விற்பனை செய்தல் என்பவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் வனத்துறையினர் ஆளுங்கட்சியினரால்  அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments