Latest News

October 21, 2014

புலிகள் மீதான தடை நீக்கப்பட் விவகாரம் அரசியல் ரீதியானதல்ல! அது நீதித்துறையின் வெளிப்பாடு! ஐரோப்பி ஒன்றியம் விளக்கம்!
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை, நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியானதல்ல. அது நீதித்துறையின் வெளிப்பாடும் தீர்ப்புமாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்ப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியாக தீர்மானிக்கவில்லை. இந்தத் தீர்ப்பானது முழுக்க முழுக்க ஒரு சட்டரீதியானது.
ஜனநாயகத்தின் ஆரோக்கியம்மிக்க முக்கியமான நீதித்துறை செயற்பாடு அரசியல் மற்றும் சட்டவாக்கத்தில் இருந்து வேறுபடுவதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்

எனவே நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான புரிதல் மிகவும் அவசியமானது. அரசியல் பொறிமுறைமையும், நீதிமன்றப் பொறிமுறைமையும் தனித் தனியே இயங்குவதே ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளமாகும்.

எனவே நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உன்னிப்பாக ஆராய்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »