Latest News

October 25, 2014

ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்டதாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட நான்கு போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் -
by admin - 0

வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்டதாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட நான்கு போராளிகளின் 29ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயகத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. நெடுமாறன் ஐயா அவர்கள் தனது பயணத்தினை நிறைவு செய்து வன்னித் தளத்திலிருந்து தமிழகம் திரும்பியவேளை அவரை பாதுகாப்பாக மன்னாருக்கு அழைத்துச் சென்று தளபதி விக்ரர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தளம் திரும்பி வரும் வழியில் வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து மேற்கொண்ட தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தாயக விடுதலைக் கனவுடன் கல்லைறையில் உறங்கும் செல்வங்கள்….

கப்டன் லோறன்ஸ் (மருதலிங்கம் சிவலிங்கம் – கொக்குத்தொடுவாய், மணலாறு)
லெப்டினன்ட் சபா (கந்தையா சிவமூர்த்தி – கொக்குத்தொடுவாய், மணலாறு.)
2ம் லெப்டினன்ட் லலித் (நடேசு இராஜேந்திரன் – முள்ளியவளை, முல்லைத்தீவு.)
2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்) (தம்பிஐயா இரத்தினசாமி – முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!


« PREV
NEXT »