Latest News

September 04, 2014

ராஜபக்ஷ ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை
by admin - 0

மொனராகலை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சனத் பியபிரேம வாளுடன் வைத்திசாலைக்கு முன்பாக நடந்து கொண்ட காணொளி அடங்கிய செய்தியை ஊடகங்கள் வெளியிடயிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் அழுத்தங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கடும் அழுத்தங்களை கொடுத்து அந்த செய்தியை நிறுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் வன்முறையான செயல் அடங்கிய செய்தி மக்களுக்கு சென்றால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகள் குறையக் கூடும் என அரசாங்கம் கருதியுள்ளது. சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவதற்கு பதிலாக அரசாங்கம் அதனை அழிப்பதற்கான தெரிவை மேற்கொண்டு அழுத்தங்களை கொட ராஜபக்ஷ ஆட்சியில் ஊடக சுதந்திரம் இல்லை என்பது இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.
அரசாங்கத்திற்கு ஏற்ற வகையில் ஊடகங்களை இயங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.
இது மிகவும் ஆபத்தான நிலைமை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
« PREV
NEXT »

No comments