யாழ்.பண்ணையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தில் இன்று இரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் இனந்தெரியாத நபரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி கண்ணாடி நொருங்கியுள்ளது. இதனால் பேருந்துக்குள் இருந்த பெண்ணொருவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பதற்றமான சூழ்நிலையையும்கட்டுப்படுத்தினர்.
இதேவேளை நேற்றைய தினம் தனியார் பேருந்து உரிமையாளர்களும்,சாரதிகளும் வழித்தட அனுமதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனாலும் குறித்த பணிப்புறக்கணிப்பு இன்றைய தினம் இடம்பெறவில்லை.இந்த நிலையிலே பேருந்து மீதான கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும்,சாரதிகளுக்கும் அச்சத்தை வருவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons