இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடை பெற்ற பளுத்தூக்கும் போட்டியில் பதக்கங்களை வென்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மாணவhகள் ஆசிரியாகள் பழைய மாணவாகள் மற்றும் பெற்றோர்களினால் பெரும் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி பாண்ட் வாத்திய இசையுடன் கல்லூரி மைதானத்திறக்க அழைத்து வரப்பட்ட வீராகள் மாலைகள் அணவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
வட மாகாணப் பாடசாலைகள் பளு துாக்கும்போட்டியில் பதினெட்டு பதக்கங்களை வென்றுள்ள போதிலும் எட்டுப் பதக்கங்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரி அமிபர் தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்சத்தியபாலன் யாழ்ப்பாணம் கல்வி வலய உடங்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்தயாளன் மற்றும் பழைய மாணவாகளும் உரையாற்றினார்கள்.
Social Buttons