அன்பான உறவுகளே! எமது உரிமைக்கான ஈழப்போரில், சிறிலங்கா அரசு நடத்திய, போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் முன்னெடுக்கும் தமிழின அழிப்பின் விசாரணைக்கு உரிய கால எல்லையாக 21.02.2002 முதல் 15.11.2011 வரையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் அறியத் தருவதுடன்,
அக்டோபர் மாதம் 30 - 10 - 2014 விசாரணைகளை பதிவு செய்வதற்கான இறுதிக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இக் காலவரையறைக்குள், எமமால் முடிந்தவரை துரிதமாக, எமக்குத் தெரிந்த, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை, உரிய முறையில், உடன் பதிவு செய்வதற்கு ஆவன செய்ய முன்வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தமிழின அழிப்புத் தொடர்பான ஆதாரங்கள்:
சித்திரவதை, துன்புறுத்தல், காணாமல் போகச்செய்தல், பாலியல் வல்லுறவு, கொத்துக் குண்டு (Cluster bomb), இரசாயன தாக்குதல், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் தொடர்பானவை, கைதுசெய்து காணாமல்போனோர் - வாழ்விடப்புறம் தொடர்பானவை, நிலப்பறிப்பு, குடிமனை அபகரிப்பு, பாதுகாப்பு வலயம் போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகப் பதிவு செய்தும் மற்றும் காணொளிகள், நிழற்படங்கள் (போட்டோ), ஒலிப்பதிவுகள் என்பனவற்றை திரட்டி ஆவணப்படுத்தலாம்.
பிரித்தானிய தமிழர் பேரவை இவை தொடர்பான முழு விபரங்களையும் அறியத் தந்து உதவுவதோடு பதிவு செய்ய உங்களுக்கு உதவும்.
நீங்கள் விரும்பினால் மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org ஊடாக அல்லது தபால் மூலம் அனுப்ப OHCHR Investigation on Sri Lanka (OISL), UNOG-OHCHR , 8-14 Rue de la Paix , CH-1211 Geneva 10, Switzerland எனும் முகவரியைப் பாவிக்கலாம்.
புகைப்பட அடையாள அட்டை உள்ள பயிற்றப்பட்ட எம் தொண்டர்கள் உங்கள் சாட்சியங்களைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஒழுங்குபடுத்தி பதிவு செய்யவும் அதனை உரிய இடத்திற்கு உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கவும் உதவுவார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியமளிக்க விரும்புபவர்கள் மற்றும் அவர்களை தொடர்புபடுத்த விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொள்ள 07425214230 எனும் தொலைபேசி இலக்கத்தினைப் பாவிக்கவும்.
பிரித்தானிய தமிழர் பேரவை
Social Buttons