Latest News

August 03, 2014

குமார் குணரட்னம் மீண்டும் இலங்கைக்குள் ?
by admin - 0

ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட குமார் குணரட்னம் மீண்டும் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
போலியான பெயர் ஒன்றைப் பயன்படுத்தி இவர் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குமார் குணரட்னம் முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக கருதப்படுகின்றார்.
குமார் குணரட்னம் கடந்த வாரம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜையான குமார் குணரட்னம் இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட குமார் குணரட்னம் மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவுஸ்திரேலியா சென்ற அவர் தமது கடத்தலுக்கு பாதுகாப்புத் தரப்பினரே தொடர்பு என குற்றம் சுமத்தியிருந்தார்.
குமார் குணரட்னம் இரண்டு கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வருவதாகவும், இம்முறை எந்த பெயரில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments