Latest News

August 14, 2014

இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் அட்டகாசம்!
by Unknown - 0

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் குறித்த பகுதிக்கு வந்தவர்கள் சனசமூக நிலைய கதவினை உடைத்துக் கொண்டு உட்சென்றவர்கள் அங்கிருந்த கதிரைகள் , மேசைகளை , அலுமாரிகளை உடைத்து எறிந்ததுடன் விளையாட்டு பொருட்களையும் எடுத்து வெளியில் வீசியுள்ளனர்.

மேலும் அங்கிருந்த கதிரைகளை எடுத்துச் சென்று ஈச்சமோட்டை குளத்திற்குள் வீசிவிட்டும் சென்றுள்ளனர்.இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் ஆமி என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சிந்தனையில் அங்குள்ள பெண் பிள்ளைகளுடன் சேட்டை விட்டுள்ளனர்.

இதனையறிந்த பெற்றோர் ஈச்சமோட்டை சனசமூக நிலைய நிர்வாகத்திடம் தெரிவித்தனர் இதனையடுத்து அவர்களை சனசமூக நிர்வாகம் தட்டிக்கேட்டனர்.

அதனையடுத்து ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் இளைஞர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டே இந்த சனசமூக நிலையம் உடைக்கப்பட்டதுடன் தளபாடங்களும்  பொருட்களும் சேதமாக்கப்பட்டதுமாகும்.

மேலும் தங்களுடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்றும், நாங்கள் இராணுவம் எங்களுக்கு இங்குள்ள இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வார்கள்  எள்றும் அவர்கள் மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளதுடன் குறித்த விடயங்களை பொலிஸ் நிலையத்திலும் பதிவு செய்துள்ளனர்.






« PREV
NEXT »