இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கைக்கு எதிரான கோஷங்களை திரையுலகத்தினர் எழுப்பினர்.
“தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை”, “தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Social Buttons