Latest News

August 06, 2014

பாடசாலை மாணவிகள் இருவர் பாலியல் வல்லுறவு: இராணுவ வீரர் விளக்கமறியலில்!
by Unknown - 0

களுத்துறை வடக்கு கடற்கரை பகுதியில் 14 வயதான இரண்டு பாடசாலை மாணவிகளை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 சந்தேக நபர்களில் ஒருவரான இந்த இராணுவ வீரர்கள் களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று களுத்துறை நீதவான் அயேஷா ஆப்தீன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபரை அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் , களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான இராணுவ வீரர் நாகொட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சந்தேக நபரை பாலியல் நோய் சம்பந்தமான விசேட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பொலிஸார் சமர்பித்த அறிக்கை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான், சந்தேக நபரை பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
களுத்துறை வடக்கு கடற்கரையில் கடந்த 26 ஆம் திகதி 14 வயதான இரண்டு பாடசாலை மாணவிகளை கடத்திச் சென்ற 5 இளைஞர்கள், காடு ஒன்றில் வைத்து மாணவிகளை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் ஹொட்டல் ஒன்றுக்கு கொண்டு சென்று அங்கும் மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்கள் கடந்த 3 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அந்த 8 பேரில் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 4 இளைஞர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
ஹொட்டல் முகாமையாளர், கடற்படை வீரர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆகியோர் ஏனைய மூன்று சந்தேக நபர்களாவர்.
« PREV
NEXT »