Latest News

August 15, 2014

கறுப்புபட்டியலில் உள்ளவர்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்க முடியும் - அரசாங்கம்
by Unknown - 0

இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் தங்களது பெயர்களை அதிலிருந்து நீக்கிக் கொள்ள விண்ணப்பிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்களை அரசாங்கம் கறுப்புப் பட்டியலிட்டுள்ளது.   அதில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புக்களும், 424 தனிப்பட்ட நபர்களும் கறுப்புப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

1968ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 45ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தம்மை கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் தடை செய்யப்பட்டவர்களின் தடையை நீக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சிற்கு காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
« PREV
NEXT »