இன்று
 விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 29 ஆண்டுகள் 
நிறைவடைந்துவிட்டன.1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் 
அதிகாரபூர்வமாகக்
 கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் 
பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு 
வீரச்சாவடைந்துமுள்ளனர்.
மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் 
மீதான தாக்குதலோடு பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்குகிறது. 
அன்றிலிருந்து தீச்சுவாலை வரை பெரும்பாலும் எல்லாக் களங்களிலும் பெண் 
புலிகளின் பங்களிப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்திய 
இராணுவத்துடன் புலிகளுக்கு மோதல் ஏற்பட்டபோது பெண்புலிகளின் முதலாவது 
உயிர்ப்பலி நிகழ்ந்தது.கோப்பாய்க்கும் நாவற்குழிக்குமிடையில் நடந்த 
சண்டையில் லெப்.மாலதி வீரச்சாவடைந்தார்.அன்றிலிருந்து இன்றுவரை 
ஆயிரக்கணக்கான பெண் புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
.jpg)
Social Buttons