ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அரச தாக்குதல் மற்றும் தொந்தரவுகளிலிருந்து தப்பியோடும் உண்மையான அகதிகள் அல்ல என்றும், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் படகில் வந்த பொருளாதாரக் குடியேறிகளாக இருக்கலாம் என்றும் கருதுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.
இவர்கள் இப்போது இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார்கள். அவர்களில் இந்தியப் பிரஜைகள் அல்லது இந்தியாவில் வதிவிடம் பெற்றவர்கள் யாராவது இருந்தால் அவர்களை மீண்டும் பெற்றுக்கொள்வதாக இந்தியா உறுதியளித்திருக்கிறது.
நாடு திரும்ப மறுக்கும் எவரையும் ஆஸ்திரேலியா தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தனது விசாரணை முகாம்களுக்கு அனுப்பக்கூடும்.
Social Buttons