Latest News

July 11, 2014

கோத்தபாயவை பிரதமராக்கும் திட்டம்: பிக்குகளுக்கு இலஞ்சம்
by Unknown - 0

பௌத்த பிக்குகளை பயன்படுத்தி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமராக அறிவிக்கும் செயற் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆயிரம் பிக்குமார் கொழும்புக்கு வரவழைத்து இந்த திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
அரசியல் மற்றும் சமூக ரீதியாக பிரபலமான சில பிக்குகளுக்கு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பெருந் தொகை பணத்தை இலஞ்சமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
அரசாங்கத்துடன் நெருக்கமான செல்வந்தர்கள் சிலர் இந்த பணத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் அவர்களே இந்த திட்டத்தின் சூத்திரதாரிகளாக இருந்து செயற்பட்டு வருகின்றனர்.
பிரதமர் பதவியை எதிர்ப்பார்த்திருக்கும் பசில் ராஜபக்ஷ, ஊழல் பேர்வழி, பௌத்தர்களின் ஆதரவு அவருக்கு இல்லை என ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ள இவர்கள், பிரதமர் பதவியை ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியில் உள்ள ஒருவருக்கு வழங்குவதும் ஆபத்தானது என்பதால், அந்த பதவிக்கு கோத்தபாய ராஜபக்ஷவே தகுதியானவர் எனவும் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் பிரதமராகும் முனைப்பில் இருந்து வரும் கோத்தபாய ராஜபக்ஷ தனது உட்குழுக் கூட்டத்தை அண்மையில் வர்த்தகர் ஒருவர் வீட்டில் நடத்தியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, குழப்பமடைந்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு தகுதியற்றவர் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்கள் நிலைப்பாடு ஒன்றை உருவாக்குமாறு தனது குழுவினருக்கு பணித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
« PREV
NEXT »