அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கடும்போக்குக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், படகு மூலம் வந்த சிறுவனுக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்டு கப்பலொன்றில் ஏறி 16 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவை அடைந்த சிறுவன், மெல்பேர்னில் வாழ்ந்து வருகிறான்.
குறித்த எத்தியோப்பிய சிறுவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடிய ஸ்கொட் மொரிசன், சிறுவனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமது நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை விபரித்துள்ளார்.
சிறுவனின் சார்பில் பிரபல சட்டத்தரணி டேவின் மாண் வாதாடியிருந்தார்.
விசாக்கள் இல்லாமல் அவுஸ்திரேலியாவை அடைந்த ஏனைய அகதிகள் தொடர்பிலும் இதே நிலைப்பாட்டை அனுசரிக்குமாறு மாண் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுததார்.
விசா இல்லாமல் வருபவர்களும் தம் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வெண்டுமென சட்டத்தரணி மாண் குறிப்பிட்டார்.
ஆனால், படகில் தஞ்சம்கோரிச் சென்ற இலங்கை அகதிகள் தொடர்பில் மொரிசன் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கின்றது.
அதிகளவான இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில், மொரிசனின் இந்த மாற்றமானது அரசாங்கத்தின் கடும்போக்கு தன்மைக்கு எதிரான வழக்குகளின் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மொரிசனின் உத்தரவு தமது உயிரைக் காப்பாற்றியிருப்பதாக எத்தியோப்பிய சிறுவன் தெரிவித்துள்ளான்.
Social Buttons