பிரித்தானியா ஸ்கொட்லாந்தில் நடைபெற உள்ள பொது நலவாய விளையாட்டு ஆரம்ப விழாவில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவதைக் கண்டித்து பிரித்தானியா வாழ் தமிழர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகுகின்றார்கள்.
தமிழின அழிப்பைத் தொடர்ச்சியாக நடத்தி வரும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக உலகெங்கும் பல்வேறு வடிவங்களில் தமிழர்களால்போராட் டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிறீ லங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் எதிர்ப்போம் என உறுதி பூண்டு மேற்கொள்ளப் படும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப்போராட்டம் மிகப் பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்ளப் போகும் போராட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜுலை மாதம் 23 ம் நாள் தமிழர் வரலாற்றில் பதியப் பட்டுள்ள தமிழின அழிப்பு நாள்களில் மறக்க முடியாத ஓர் நாள். அந்த நாளில் பொது நலவாய விளையாட்டும் நடைபெற உள்ளதால் கறுப்பு ஜுலை நெருப்பு நினைவுகளோடு தமிழினப் படுகொலையாளி மகிந்த வருவதை முழுப் பலத்துடன் எதிர்க்கத் தமிழ் மக்கள் ஸ்கொட்லன்ட் நோக்கி பேருந்துகளில் புறப்பட உள்ளனர்.
ஜுலை 23 மாலை 3:30க்கு ஸ்கொட்லன்ட் G40 3QZ , GLASGOW, Barrowfield Street இல் நடைபெற உள்ள இந்த மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைக்கின்றார்கள்பிரித்தானியத் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவினர்.
தொடர்புகளுக்கு
020 3371 9313

நன்றி
ஈழம் றஞ்சன்
Social Buttons