கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 23ம் திகதி சூரியனில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஏற்படாத அளவு பாரிய வெடிப்பு இதுவாகும் என்று பதிவாகியுள்ளது. இதனால் சுமார் 3000 கிலே மீட்டருக்கு சூரிய பிளம்புகள் தூக்கி எறியப்பட்டுள்ளது. இவை நேரடியாக பூமியை நோக்கி எறியப்பட்டுள்ளது. அவை அப்படியே பூமியை நோக்கி வந்தால்... அண்டவெளியில் நாம் அனுப்பியுள்ள அனைத்து சட்டலைட்டுகளும் முடக்கிப்போய், இனரர் நெட் என்று ஒன்று இருந்திருக்காது. மின் காந்த அலைகளை அது தோற்றுவிக்கும் என்பதால் பறப்பில் ஈடுபட்ட அனைத்து விமானங்களும் விழுந்து நொருங்கி இருக்கும். அதுமட்டுமா நாம் சார்ஜில், அல்லது மின்சாரத்தோடு எந்த கருவியை இணைத்து இருக்கிறோமோ அவை அனைத்தும் பழுதாகி போயிருக்கும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கற்காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி வாழவேண்டி இருந்திருக்கும். இவை அனைத்தும் எவ்வாறு தடுக்கப்பட்டது ? என்று கேட்கிறீர்களா ? பூமியை நோக்கிவந்த அந்த 3000 கிலேமீட்டர் பரப்பளவு கொண்ட சூரிய பிளம்பு, என் நேரமானாலும் தக்கலாம் என்று 2012 ஜூலை மாதம் விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருந்தார்கள். பூமி சுற்றும் வேகம். பூமி சூரியனை சுற்றி வரும் வேகம் என்பனவற்றை அவர்கள் கணக்கு போட்டு, இந்த பிளம்பின் தாக்கத்தில் இருந்து நாம் தப்ப முடியுமா என்று கணக்கு போட்டார்கள். சுமார் 48 மணி நேரத்தில் அது பூமையை தாக்கும் என்று கூட நினைத்தார்கள். ஆனால் அது தான் நடக்கவில்லை.
பூமியை நோக்கி வந்த அந்த சுரிய பிளம்பு, திசை மாறிவிட்டது. இதை தான் கடவுளின் செயல் என்பார்களோ தெரியவில்லை. உங்கள் அனைவருக்கும் தெரியும், விண்வெளியில் காற்று இல்லை. அங்கே ஒரு விசை பிரயோகிக்கப்பட்டால், அது தொடர்ந்து ஒரே திசையில் தான் செல்லும். அவ்வாறு தான் செல்லவேண்டும். ஆனால் பூமியை நோக்கி வந்த அந்த பிளம்பு எப்படி பாதை மாறியது என்று தான் தெரியவில்லை.
No comments
Post a Comment