Latest News

July 12, 2014

காணாமல்போனோர் தொடர்பில் 19284 முறைப்பாடுகள்!
by Unknown - 0

காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை மொத்தமாக 19,284 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றுள் 5000 முறைப்பாடுகள் பாதுகாப்புப் படையினர் காணாமற்போனமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் வழங்கப்பட்டவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 462 முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக சுயாதீன புலன்விசாரணை குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருகின்றன.
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட பகிரங்க அமர்வுகள் இம்மாத முற்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றிருந்தன.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாதவர்கள், காணாமற்போன தமது உறவுகள் தொடர்பில் தபால்மூலம் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு அதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.
இந்த ஆணைக்குழு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்கனவே தமது பகிரங்க அமர்வுகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »