Latest News

June 15, 2014

வடக்கின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தும் கவலையளிக்கிறது ; பிரித்தானியா
by admin - 0

இலங்கையின் வடபகுதியில் மனித உரிமைகள் நிலை தொடர்ந்தும் கவலையளிப்பதாகவே உள்ளது கருத்து , மதச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையிலேயே அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர் என பிரித்தானியாவின் சமூக , உள்ளூராட்சி , மற்றும் வெளிவிவகாரப் பணியக மூத்த இணையமைச்சர் பரோனஸ் வர்சி தெரிவித்துள்ளார் . அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதரகம் , ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் தொடர்புகளைப் பேணி வருகிறது . இலங்கையின் வடக்கே மனிதஉரிமை ஆர்வலர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது , சிறுபான்மை மதத்தினர் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்போர் தாக்கப்படுவது , குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது . இலங்கையில் போரின் போது இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான , தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் , அதனை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்காளர்களுடன் இணைந்து நாமும் செயற்படுகிறோம் . இலங்கையில் அமைதி , நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் , மனித உரிமைகள் , நல்லிணக்கம் என்பன முக்கியமானவை என்று நாம் நம்புகிறோம் . இந்த முன்னேற்றத்தின் மூலம் , இலங்கையை ஒரு வளமான, வலுவான நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தனது உரையில் அவர் தெரிவித்தார் .
« PREV
NEXT »

No comments