மூழ்கடிக்கச்செய்து அதில் பயணித்த 5 மீனவர்களை கடலில் பாயுமாறு வற்புறுத்திய
இலங்கை கடற்படையினருக்கு எதிராக புகார் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மெரின் பொலிஸ் பிரிவின் கடற்கரை பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்தனர். குறித்த படகின் உரிமையாளரான ஏ.பவ்யன் என்பவரினாலேயே இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறைப்பாடானது தமிழ் நாட்டு சொத்துக்களின் இழப்பு மற்றும் கொலை செய்ய முயற்சித்தல் ஆகியவற்றினடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் அதிகாலை 1.30 மணியளவில் ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
போது அங்கு வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் படகை மூழ்கடிக்கச்செய்து அனைவரையும் கடலில்
பாயுமாறும் தெரிவித்துள்ளனர். பின்னர் குறித்த கடற்படை அதிகாரி தப்பியோடியதுடன் தம்முடன் வந்த வேறு மீனவர்கள் தம்மை காப்பாற்றியதாகவும் குறித்த மீனவர்கள் தமிழ்நாட்டு மெரின் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
Social Buttons