Latest News

June 07, 2014

அம்பாறை மாவட்டத்தில் தனது பணியை ஆரம்பித்தத்து பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் (பிரான்ஸ் )(புகைப்படங்கள் இணைப்பு)
by Unknown - 0

பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் மேலும் ஒரு பணியாக, பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலான இலவச பாடவகுப்பு ஆரம்ப நிகழ்வு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மூன்று கிராமங்களை உள்ளடக்கிய சுமார்  84 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வுக்கு பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி திரு.வன்னியசிங்கம் ஜெயந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாள்(கணிதம்) திரு.எஸ்.மாதவன்பிள்ளை, சேவைக்கால ஆலோசகர் வீ.ஏ.கிறிஸ்டி, பாடசாலை அதிபர்களான தி.உதயகுமார், ஏ.டி.ஜேம்ஸ், கே.கமலராஜன் ஆகியோரும் இலவச பாட வகுப்பில் கலந்துகொள்ளும் பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலம், கோமாரி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை, பாணமை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 11 மாணவர்களும்  அவர்களது பொற்றோர்களும் என  ஏராளமானவர்கள் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் போது பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் இணையத்தளம் http://www.singingfishfrance.com/ பொத்துவில் கோட்டக் கல்விப்பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை வலயத்துக்கு உட்பட்ட மூன்று கிராமங்களை உள்ளடக்கிய சுமார்  130 மாணவர்களுக்கு இலவச பாடவகுப்பு ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத்து.
எமது  பிரதேசத்தில் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில் எதிர்கலத்தில் பல்வேறு  பணிகளை முன்னெடுக்கவுள்ள பாடுமீன் சங்கத்தின் செயற்பாடுகளுடன் ஏனைய நாடுகளில் உள்ள எமது மண்ணின் உள்ளங்களையும் இணையுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது









« PREV
NEXT »