தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிலிருந்து 75மீற்றர் தூரத்திலுள் சனசமூக நிலையத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என
பதிவு இணையத்தின் யாழ் செய்தியாளர் கூறியுள்ளார். இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணி தொடக்கம் இராணுவம் சனமூகத்தின் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் குறித்த சனசமூக நிலையத்தின் நிர்வாக உறுப்பினர்கள் யாரென விசாரித்து அவர்களைத் தேடிச் சென்று திறப்பினை பெற்றுக் கொண்டுள்ளது. இராணுவத்தினர் இரண்டு நாட்கள் தாம் இங்கு தங்கப் போவதாகவும் கூறியுள்ளனர். அச்சம் காரணமாக மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலையில் குறித்த நிர்வாகி சம்மதித்துள்ளார் என அங்கிருந்து வரும்
செய்திகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment