சீனாவைச் சேர்ந்த 80 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் ஆயிரம் ஈக்களைக் கொன்று மக்களின் பாராட்டினைப் பெற்று வருகிறார்.
80 வயதான ருவான் டங் என்ற மூதாட்டி பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர். இவர் கடந்த 14 வருடங்களாக பீடைக் கட்டுபாட்டில் தனது வாழ்கையை அர்ப்பணித்துள்ளார். கிழக்கு சீனாவின் ஹெங்ஷொஊ நகரில் தினமும் நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் ஈக்களை பிடிப்பதற்காக தனது நேரத்தினை செலவிடுகின்றார்.
இது குறித்து டங் கூறுகையில், 'நான் ஓய்வுபெற்ற பின்னர் எனது சமூகத்துக்கு உதவும் விதமாக ஏதாவது செய்ய காத்திருந்தேன். கோடை காலங்களில் ஈக்களின் தொந்தரவினை நான் அவதானித்தேன். நான் பிரயோசமாக இருக்க ஈக்களை கொல்வதனை சிறந்த வழியாக தீர்மானித்தேன். தற்போது அதனை தினமும் செய்துகொண்டே இருக்கிறேன்.' எனத் தெரிவித்துள்ளார்.
இவரது அர்ப்பணிப்பை சீன ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளது. 'ஈக்கள் மக்களின் எதிரி' என பத்திரிகை ஒன்று குறிப்பிட்டு டங்கைப் பாராட்டியுள்ளது.
'ஈக்களை அழித்து அயலவர்களுக்கு உதவுவதில் நான் மிகவும் மரியாதையாக உணர்கிறேன். எனது வயதில் இதனை ஒரு அர்த்தமுள்ள பாத்திரமாக உள்ளது. அத்துடன் இது என்னை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது' என தொலைக்காட்சி ஒன்றுக்கு டங் கூறியுள்ளார்.
58 வயதான ஜியான் எனும் டங்கின் அயலவர் கூறுகையில், ஈக்களை கொல்லுவதில் அவர் ஒரு விசேடமானவர். அவர் எமது நாயகி' எனப் புகழ்ந்துள்ளார்.
Social Buttons