21ஆம் நூற்றாண்டில் எல்லைகள் தடைகளை கடந்த நிலையில் இணைய ஊடகங்கள் என்பதே இவ்வாண்டுக்கான கருப்பொருளாகும். கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்குவிப்பதற்கும் முகமாக இணையத்தில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துவதும் பொது அமைப்புக்களை பலப்படுத்த வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இன்று சில அரசுகள் பத்திரிகை தணிக்கைகளையும் அடக்கு முறைகளையும் மேற்கொண்டு கருத்து சுதந்திரத்திற்கு தடை விதித்திருக்கின்ற போதிலும் இணையத்தளம் ஊடாக சர்வதேச ரீதியாக கருத்து சுதந்திரத்தை பரப்ப கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இணைய ஊடகங்கள் இன்று எல்லைகள் தடைகளை கடந்த நிலையில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இணையத்தளம் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டது ஐ.நா உப அமைப்பான யுனெஸ்கோ கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்காக ஊக்குவித்து வருகிறது.
சகல அரசுகளும் கருத்து சுதந்திர ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் ஐ.நா.சாசனத்தில் கையொப்பம் இட்ட நாடுகளே இன்று அதை மதிக்க தவறியுள்ளன.இலங்கை உட்பட ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகள் ஐ.நா. மனித உரிமை சாசனம் 19ஆவது சரத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை முற்றாக மறுப்பதுடன் கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகவியலாளர்களை படுகொலை செய்து வருகின்றன.இலங்கையில் 1992ஆம் ஆண்டிற்கு பின் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகுக்கும், மக்களுக்கும் உண்மையை உள்ளபடி வெளிப்படுத்தியதற்காக உயிரை ஈகம்செய்த ஊடகத்துறையினரின் தியாகங்கள் போற்றுதற்குரியது
Social Buttons