மட்டக்களப்பில் நடந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் சமகால கருத்தாடல் நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த மாவை சேனாதிராசா எம்பி திடீரென மயங்கி விழுந்ததால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணித்தியாலமாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென மலை சரிந்து விழுந்ததைப்போல சரிந்து விழுந்துள்ளார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அவசரஅவசரமாக முதலுதவி வழங்கி அவரை சுயநினைவிற்கு கொண்டு வந்தனர். உடனடியாக வைத்தியரிற்கு அறிவிக்கப்பட்டு, வைத்திய பரிசோதனையும் நடத்தப்பட்டிருந்தது. இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் குழப்பம் நிலவியது. பின்னர் நிலமை சீரடைந்து வழமைக்கு திரும்பியதாக கிழக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.
Social Buttons