இராணுவத்தினர் போரில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதும் புலம்பெயர் புலிப் பயங்கரவாதிகள் சர்வதேசத்தில் ஈழம் என்ற கொள்கையை முன்னோக்கி நகர்த்தி வருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கு எதிராக இலங்கையும் சர்வதேச ரீதியில் கொள்கை ரீதியான போரை தொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையை பின்நோக்கி நகர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன், ஈழக் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Social Buttons