Latest News

May 07, 2014

இலங்கையில் மேலும் வன்முறைக்கான ஏதுக்கள்!- கனடா எச்சரிக்கை
by Unknown - 0

இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெற ஏதுக்கள் உள்ளதாக கனடா எச்சரித்துள்ளது.  இன்னர் சிட்டி பிரஸ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் கனேடிய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் இந்த கருத்து வெளியிடப்பட்டதாக இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய வதிவிடப் பிரதிநிதி குய்லர்மோ ரிச்சின்ஸ்கியின் கருத்துப்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீம்பிள்ளையின் விஜயத்தின் பின்னர் இலங்கையில் சிவில் சமூகம் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் கவலைக்குரியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கனேடிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற நோர்வே, அமெரிக்கா, நைஜீரியா, ஜப்பான், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இலங்கையின் நிலைமை குறித்து கரிசனை கொள்வதாக குறிப்பிட்டனர்.
எனினும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, மறுத்துள்ளமையையும் இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »