Latest News

May 05, 2014

தமிழகத்துக்கு மீண்டும் இலங்கை அகதிகள்
by admin - 0

இலங்கையில் இருந்து அகதிகள் குழுவொன்று கடல் மார்ககமாக இன்று தமிழகம் சென்றடைந்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் தாங்கள் இந்தியாவுக்குத் தப்பி வந்திருப்பதாக இந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கை அகதிகள் கடல் மார்க்கமாக இன்று தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்தனர்.
அவர்களிடம் தமிழக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது அகதிகள் குழுவைச் சேர்ந்தவர்கள் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி தாங்க முடியாமல் நாங்கள் தமிழகம் வந்துள்ளோம்.
எங்களை போல் சுமார் 2 ஆயிரம் அகதிகள் மன்னார் காடுகளில் பதுங்கி இருக்கின்றனர்.
மேலும் இலங்கையில் விடுதலைப் புலிகள் இருப்பதாக கூறி தமிழர்களை இலங்கை இராணுவம் தொந்தரவு செய்து வருகின்றனர்' என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் செல்வது சமீப காலமாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »