Latest News

May 01, 2014

இராணுவம் ஊடக முகவர்களை தெரிவு செய்து தமிழ் இளைஞர்களுக்கு புதிய பொறி – தமிழ்நெற் இணையத்தளத்தின் அதிர்ச்சித்தகவல்
by admin - 0

யாழ் குடாநாட்டுக்கான இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா புதிய தந்திரோபாயங்கள் மூலம் தமிழ் இளைஞர்களை அரச பணிகளுக்கு சேர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
SL_Mil_Recr_02
SL military officers conducting interview at Kokkuvil on Sunday
மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்க போர் பயிற்சி கல்லூரியில் பயிற்சிகளை பெற்றுள்ளதுடன் 2012 ஆம் ஆண்டு கல்லூரியின் விருதினையும் பெற்றுள்ளார்.
SL_Mil_Rec_Notice
Recruitment notice promising government jobs without any reference to SL military
2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை தாக்குதலில் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக தனது பங்கை தொடர்ந்தும் மலேசியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து வெளிநாட்டு தூதரக சேவையில் இணைத்துகொள்ளப்பட்டார்.
Kannan_01
Kannan, the chief agent operating behind the scene to deceive people into SL military recruitment drive through a public operative, is said to have returned from abroad to work with Gotabhaya Rajapaksa and Selvarasa Pathmanathan alias KP.
யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து இருக்கும் இலங்கை இராணுவத்தின் தளபதி என்ற நிலையில், ஈழ தமிழர்களுக்கு எதிரான புதிய தந்திரோபாயங்களை முன்னெடுத்து வருகிறார்.
பிரித்தானியாவில் இருந்து சென்றுள்ள தமிழ் சீ.என்.என் கண்ணன் என்ற இரகசிய முகவர் மூலமாக சிறந்த கொடுப்பன வழங்கப்படும் என்ற உத்தரவாத்தின் அடிப்படையில் உதயபெரேரா, தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் பணிகளுக்கு இணைத்து வருகிறார்.
Udaya_Perera
Major General Udaya Perera, who after his participation in the genocidal war, received ‘training’ in the USA [Photo courtesy: Website of SL military HQ in KLN]
இராணுவத்தின் நேரடியான பிரசாரங்கள் தோல்வியடைந்த நிலையில், இராணுவம் வர்த்தகர்கள் மற்றும் ஊடக முகவர்களை தெரிவு செய்து தமிழ் இளைஞர்களுக்கு பொறி வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை தமிழ் பொது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்க ஏன் தவறியது என யாழ் பொது தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
SL_Mil_Recr_01
A section of Tamil youth deceived to attend an interview session held in Kokkuvil on Sunday.
வடக்கு மாகாண சபை தமிழ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இராணுவ வடிவமைப்புகளில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கண்ணன், பொது செயற்பாடுகள் மூலம் மக்களை ஏமாற்றி இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முக்கிய முகவராவார்.
Kannan_Yathavan
KP operatives in Vadamaraadchi: The secret operative Kannan [R] and public operative Yathavan [L]. The person standing in between the two at a private party has been blacked out by TamilNet for he is not known of involvement.
வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ள அவர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சிறந்த சம்பளத்தில் அரசாங்கத்தில் வேலை பெற்று தருவதாக கூறி, நல்லிணக்க மையம் என்ற போலி அலுவலகத்திற்கு வருமாறு உதய பெரேரா, 18 வயது முதல் 30 வயதான தமிழ் யுவதிகளையும் 18 முதல் 32 வயதான தமிழ் இளைஞர்களையும் அழைத்துள்ளார்.
Somasundaram_Yathavan_01
Somasundaram Yathavan
நல்லிணக்கம் என கூறப்படுகின்ற மையத்தில் உண்மையில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை.
ஆனால் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் அழிவு ரீதியான வர்த்தகங்கள் அங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
கரவெட்டி மாலுசந்தி பகுதியை சேர்ந்த விஞ்ஞான பட்டதாரியான செல்வா என்று அழைக்கப்படும் யாதுவன் சோமசுந்தரம் மூலமாக பிரித்தானியாவில் இருந்து சென்றுள்ள தமிழ் சீ. என். என் கண்ணன் ஆட்சேர்ப்பு தொடர்பிலான நெறிப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்.
Hari_club_01
Gotabhaya/KP operative Kannan and his collaborator Yathavan are behind constructing a ‘massage parlour’ in Nelliyadi in Vadamaraadchi.
இராணுவத்தின் எந்த குறிப்பும் இல்லாமல் ஆட்சேர்ப்புக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கிராம சேவகர்கள் ஊடாக அதற்கான அழைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கு செல்லும் நேர்முக தேர்வை நடத்துபவர்கள் இராணுவ அதிகாரிகளாக இருக்கின்றனர். எனினும் தமிழ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பிப்பது காலதாமதமாகியுள்ளது.
சிங்கள இராணுவ அதிகாரிகள் இளைஞர்களை மிரட்டி அவர்களின் அசல் சான்றிதழ்களை திரட்டி வருகின்றனர்.
இராணுவத்தினரினால் சேர்க்கப்படும் இளைஞர் யுவதிகளுக்கு பலாலி இராணுவத் தளத்தில் மூன்று மாத பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதுடன் அவர்கள் குடா நாட்டில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமாராட்சி கரவெட்டி இரும்பு மதவடி பிரதேசத்தை சேர்ந்த கண்ணன், பிரித்தானியாவில் இருந்து தமிழ் சீ.என்.என் என்ற தமிழ் இணையத்தளத்தை நடத்தி வந்தார்.
கொழும்பு இராணுவ கட்டமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் அந்த இணையத்தளம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Udaya_Perera_US_Army_College_01
[Photo courtesy: defence.lk]
யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவேற்றப்படும் கிசு கிசு கதைகளை போன்ற செய்திகளை வெளியிட்டு வரும் மற்றுமொரு உள்ளூர் தமிழ் இணையத்தளமான நியூ ஜப்னா இணையத்தளத்தை உதய பெரேரா தனதாக்கி கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் மிரட்டல்கள் மூலம் இணையத்ததை தனதாக்க முயற்சிகளை மேற்கொண்ட உதய பெரேரா இறுதியில் பல லட்சம் ரூபா தரகு மூலம் அதனை செய்து முடித்துள்ளார்.
புலம்பெயர் நபர் ஒருவரின் நடவடிக்கையின் கீழ் இராணுவ கட்டமைப்பு இணைத்தளத்தின் ஊடாக பணத்தை பரிமாறிக் கொண்டுள்ளது.
இராணுவ புலனாய்வாளர்கள் ஏற்கனவே சில தமிழ் இணையத்தளங்கள் மூலம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே புலனாய்வு ஊடகவியலாளர்களை பயன்படுத்தி தமிழ் நாதம் என்ற பத்திரிகையை வெளியிட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சித்தனர். எனினும் அது தோல்வியடைந்ததுடன் எவரும் அந்த பத்திரிகையை வாங்கவில்லை.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு போலியான உதயன் பத்திரிகையை வெளியிட்டது.
அனந்தி சசிதரன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து விட்டதாக அதில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அந்த பத்திரிகை போலியானது என்பதை யாழ் மக்கள் அடையாளம் கண்டு கொண்டாலும் இலங்கை இராணுவத்தினரால் வாக்களார்களை மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முடிந்தது.
கொழும்பை தளமாக கொண்ட பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கொழும்பில் வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றின் உதவியையும் உதய பெரேரா பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான செய்தியை அந்த வர்த்தகர் தணிகை செய்துள்ளார்.
கிளிநொச்சியில் படையில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் எதிர்நோக்கிய சம்பவங்கள் தொடர்பில் தமிழர்கள் பத்திரிகை மற்றும் இணையத்தளங்கள் ஊடாக தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இதனால் 49 யுவதிகளை மட்டுமே முல்லைத்தீவில் இருந்து இராணுவத்திற்கு சேர்க்க முடிந்தது.
இராணுவம் ஆட்சேர்ப்புக்கான உத்தியோகபூர்வ கூட்டங்களை நடத்திய போதிலும் இன அழிப்பு இராணுவத்தில் சேர எவரும் தயாரக இருக்கவில்லை.
இதனை புரிந்து கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி முகவர்கள் மூலம் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி, இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பை தந்திரோபாயமாக மாற்றிக்கொண்டுள்ளார்.
வடமாராட்சியில் உள்ள கரவெட்டி இரும்பு மதவடி பிரதேசத்தில் இருந்து வந்த கண்ணன் என்பவர் ஒரு நாடு கடத்தப்பட்ட தொழிலதிபராவார்.
கே.பி என்ற குமாரன் பத்மநாதனின் உதவியுடன் கோத்தபாயவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் இலங்கை இராணுவத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறார்.
கண்ணன் வடமராட்சி கிழக்கில் இராணுவ கட்டளைத் தளபதியின் உதவியுடன் மணல் அகழவும் நெய்தல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அதேவேளை கண்ணன், இராணுவப் புலனாய்வு சார்பில் பிரசாரங்களை மேற்கொள்ள யாழ்ப்பாணத்தில் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊடக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணன் மற்றும் அவரது பொது தொடர்பு அதிகாரி யாதவன் ஆகியோர் இணைந்து நெல்லியடி வதிரி – உடுப்பிட்டி வீதியில் களியாட்டு வசதிகள், மசாஜ் மற்றும் மதுபான நிலையத்துடன் கூடிய கட்டத்திற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
Udaya_Perera_US_Army_College_02
Major General Udaya Perera with US Army War College award in 2012 [Photo courtesy: defence.lk]
இவ்வாறான நிறுவனங்கள் தான் அமெரிக்கா சம்பந்தப்பட்ட போர்களில் பின்னர் பல நாடுகளில் வளர்ச்சியின் சின்னமாக மாறிவிட்டது போல், யாழ்ப்பாணத்தின் வளர்ச்சியின் சின்னங்களாக இந்த நிறுவன்ஙகள் மாறி வருகின்றன.
மசாஜ் நிலையம் என்ற நோக்கில் மதுபான உரிமத்தை பெற யாதவன் பருத்தித்துறை பிரதேச செயலக அதிகாரிகளுடன் போராடியுள்ளார்.
இந்த குழுவினர் கொழும்பில் உள்ள தூதரகம் ஒன்றுடன் மிகவும் சந்தேகமாக இருந்து வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரகம் ஒன்று சமூக விரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்டவர்களுடன் பொழுது போக்கு தொடர்பில் ஆர்வமாக இருப்பது தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு துதூதரகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் இராணுவ கட்டளை அதிகாரி உதய பெரேரா வாரம் தோறும் இவர்கள் இருவரையும் சந்தித்து வருவதாக பலாலி இராணுவ தளத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதய பெரேரா, அரசியல் இராணுவ மூலோபாயம் தமிழ் இளைஞர்களை கட்டாய சேவையில் அமர்த்தி தமிழ் சமூகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து அவர்களை பிரித்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில் செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Udaya_Perera_US_Army_College_paper
The paper produced to US Army War College by Major General Udaya Perera of the genocidal military
(மேலதிக தகவல்கள் அறிய ) http://tamilnet.com/art.html?catid=79&artid=37191
Sinhala_military_operates_Jaffna_1Sinhala_military_operates_Jaffna_2Sinhala_military_operates_Jaffna_3Sinhala_military_operates_Jaffna_4Sinhala_military_operates_Jaffna_5Sinhala_military_operates_Jaffna_6Sinhala_military_operates_Jaffna_7Sinhala_military_operates_Jaffna_8
« PREV
NEXT »