தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல்
ஜெகதீஸ்வரன் இன்றிரவு அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவை
சேர்ந்தவர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
பரவிப்பாஞ்சான் கிராமத்தினை விடுவிக்ககோரி எதிர்வரும் 26ம் திகதி
திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள
நிலையிலேயே இக்கைது நடந்துள்ளது. கைதான தங்கவேல் ஜெகதீஸ்வரன் தற்போது
மேலதிக விசாரணைக்கென வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றார்.
எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பதாக நடைபெறவுள்ள போராட்டத்தை குழப்பியடிக்க அரசு முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 26ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பதாக நடைபெறவுள்ள போராட்டத்தை குழப்பியடிக்க அரசு முழு அளவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons