Latest News

May 18, 2014

த.தே.ம.மு யின் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம்!
by admin - 0


இராணுவ அச்சுறுத்தல்களையும் தாண்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இன்று காலை முதல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது. கட்சி உறுப்பினர்களோ, ஆதரவாளார்களோ, பொது மக்களோ கட்சி அலுவலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதன் காரணமாக  திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வை அங்கு நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் இராணுவம் மற்றும் உளவுத் துறையினரது அச்சுறுத்தல்கள், கடுமையான கண்காணிப்பு நடடிவடிக்கைகளையும் தாண்டி பிரத்தியேகமான ஒர் இடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் நிகழ்வு உணர்வு புர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.




« PREV
NEXT »