இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர்
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றையவர்
காயமடைந்துள்ளார்.
குருணாகல் தம்புள்ள வீதியில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையிலிருந்த போதே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய் அதிகாலை
2.00 மணியளவில் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சம்பத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படகமுவ காட்டுப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த ஆறு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர்
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றையவர்
காயமடைந்துள்ளார்.
குருணாகல் தம்புள்ள வீதியில் போக்குவரத்து கண்காணிப்பு கடமையிலிருந்த போதே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய் அதிகாலை
2.00 மணியளவில் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
குருணாகல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சம்பத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படகமுவ காட்டுப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த ஆறு பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Social Buttons