Latest News

May 26, 2014

கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதில் சிக்கல் 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக அறிவிப்பு
by admin - 0

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று 26 ஆம் திகதி காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று தெரிவித்துள்ளார்.

த.தே.ம.முன்னணியின் யாழ்ப் பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச் சந்திப்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங் கம் மணிவண்ணனும் கலந்து கொண்டிருந்தார்.

இச் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் கடந்த 23ஆம் திகதி இரவு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை 26ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப் புப் போராட்டம் ஒன்று நடத்துவதற்கு எமது கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

கிளிநொச்சி நில அபகரிப்பைக் கண்டித்தும் இராணுவத்தின் பிடியிலுள்ள வீடுகள் நிலங்கள் பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இடம் பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளில் மீளக்குடியமர உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மேற்படி போராட்டத்திற்கான அழைப்பு கட்சியினால் விடுக்கப்பட்டிருந்தது.

மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தினை குழப்பும் நோக்கில் இராணுவ புலனாய்வுத் துறையினர் கடந்த சில தினங்களாக எமது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் வீட்டுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்திருந்ததுடன் இடம் பெயர்ந்த மக்களையும் கட்சியின் ஆதரவாளர்களையும் அச்சுறுத்தியிருந்தனர்.

இதேவேளை ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு வருகைதரவுள்ளார் என்ற காரணத்திற்காக இந்த போராட்டத்தினை நடத்தவேண்டாம் என்று எமது கட்சி அமைப்பாளர் ஜெகதீஸ்வரனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தினை கை விடுமாறு கோரியிருந்தார்.

இந் நிலையில் போராட்டம் நடத்துவதன் தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வகையில் 23ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எழுத்து மூலமான கடிதம் கட்சியின் பொதுச் செயலாளரினால் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.

அக் கடிதத்தினை பார்வையிட்ட பொலிஸ் அதிகாரி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி யிருந்தார். காரணம் கேட்டபோது அன்றையதினம் முக்கிய பிரமுகர் ஒருவர் வருகை தரவுள்ளார் அதனால் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது.

போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாதென்ற விடயத்தினை எழுத்து மூலம் தருமாறு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பதிகாரியை கோரியிருந்தார். எழுத்து மூலம் தருவது பற்றி தான் பின்னர் எம்முடன் தொடர்பு கொள்வதாக தெரிவித்திருந்தார்.

சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜனநாயக போராட்டத்தை அச்சுறுத்தல் மூலம் அரசாங்கம் நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது.

அதற்கு இடமளிக்காது சட்டதிட்டங்களுக்கு அமைவாக போராட்டத்தை நடத்துவதில் பாதிக்கப்பட்ட மக்களும் கட்சியும் உறுதியாக இருந்த நிலையிலேயே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

இதனால் எமது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட் டத்தை அன்றையதினம் திட்டமிட் டபடி நடத்த முடியவில்லை. இருப் பினும் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 11 மணியளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.          
« PREV
NEXT »