Latest News

April 08, 2014

யாழ். பல்கலை மாணவர் விடுதியில் பொலிசார் தேடுதல் வேட்டை
by admin - 0

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கோப்பாய் மாணவர் விடுதியில் உள்நுழைந்து பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவித காரணங்களும் இன்றி இன்று காலை விடுதிக்குள் உள்நுழைந்த பொலிஸார் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளதுடன், தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் விடுதியினை விட்டு வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பொலிஸாரிடம் கேட்ட போது பொறுப்பதிகாரி இல்லை என தெரிவித்தனர்
« PREV
NEXT »