எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுடன் நம்பமுடியாத புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பூப்பெய்தும் போது பொருத்தப்படும் இந்த தகட்டை அவர்கள் அழகாக கருதுகின்றனர்.
தகடுகள் மூலிகைப்பொருட்கள் சேர்த்து களி மண்ணால் செய்யப்படுகிறது. வினோதமான சடங்கில் பெண்கள் பூப்பெய்ததும் அவர்களுடையை கீழ் தாடையில் உள்ள இரண்டு பற்கள் நீக்கப்படுகிறது.
முன்னதாக அவர்களது கீழ் உதட்டில் துழைகள் போடப்பட்டு தகடுகள் பொறுத்தப்படுகிறது. பின்னர் அது படிபடியாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் உதடு விரிந்து நீண்டு கொண்டே வருகிறது.
உதடு நீட்டமாகுவதை கொண்டு பெண்களின் தந்தைகள் அவர்களுக்கு திருமணம் ஆகும் போது வரதட்சணையை இதன் மூலம் நிர்ணையிக்கின்றனர். ஆனால் இந்த வன்முறையை சமீப காலமாக பழங்குடியின பெண்கள் மறுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Social Buttons