இலங்கை அவதானமான நாடு” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் அந்த வகுதிக்குள் இலங்கை அடக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு அனைத்துலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இலங்கை மிகவும் அவதானமான நாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போருக்கு பின்னர் புனர்நிர்மாணப் பணிகளில் முன்னேற்றம் தொடர்கின்ற போதிலும் பல நிலைகளில் நாடு பின்னடைவை கண்டுள்ளது.
செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றமை தொடர்கின்றது. பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் இலங்கை காத்திரமான பங்கை செலுத்தவில்லை.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையானது கலாசார உரிமைகளை அவதானத்துக்கு உட்படுத்தியது.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு மற்றும் போரின் பின் நல்லிணக்கம் என்பவற்றை எதிர்ப்பார்த்திருக்கிறது.
அத்துடன் பெண்களுக்கான உரிமை, சுயாதீன தேர்தல் போன்ற அம்சங்களிலும் பிரித்தானியா தொடர்ந்தும் கவனம் செலுத்தும் அதேநேரம், பிரித்தானிய பிரஜை குராம் ஷேக் கொலை தொடர்பில் இலங்கையில் நீதித்துறை முன்னேற்றகரமாக செயற்படுவதாக பிரித்தானிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons