இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிய அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது அவதானத்தை அதிகரிக்க வேண்டும் என்று, சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவகம் கோரியுள்ளது.
அதன் தலைவர் ஹெலீனா கெனடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும் பிரேரணையை சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்கிறது.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலேயே இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
இவை மிகவும் கண்டனத்துக்கு உரியவை. எனவே சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் இலங்கை தொடர்பில் எச்சரிக்கையுடனும் மிகுந்த அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் தாம் வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
Social Buttons