Latest News

April 22, 2014

வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே: அழித்தே தீர வேண்டுமென்கிறார் குணதாச!!
by Unknown - 0

விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. புனர்வாழ்வு வழங்கினாலும் புலிகளின் கொள்கையை அழிக்க முடியாது என தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்த அளவிலான தீவிரவாதிகளே கொல்லப்பட்டனர். எனினும் இன்னும் வடக்கில் புலிகள் வாழ்கின்றனர்.
அவர்களைப் பாதுகாத்து போராட்டத்திற்கு தயார்படுத்தும் செயலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகிறது.
சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் அனைத்துலக ரீதியில் தீவிரவாதிகளுக்கான ஆதரவைத் தேடுவதுடன் வடக்கில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை வலுப்படுத்தும் செயற்பாட்டையும் செய்து வருகின்றனர்.
வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே. இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் இவர்களின் கொள்கைகளையும் மன நிலையையும் மாற்ற முடியாது.
தீவிரவாதிகள் எப்போதும் தீவிரவாதிகளாகவே வாழ்வார்கள். அதன் வெளிப்பாடே இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அனைத்துலக அமைப்புக்களுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகள் இன்று வடக்கை சீரழிக்க ஆரம்பித்து விட்டது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தி வடக்கு கிழக்கில் உருவாகி வரும் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும்.
மீண்டும் வடக்கில் இராணுவப் பாதுகாப்பை அதிகரித்து விடுதலைப் புலி தீவிரவாதிகளை கொன்று அழிக்க வேண்டும். இல்லையேல் ஒருபோதும் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது.
அனைத்துலக ஒத்துழைப்புடன் வடக்கில் உள்ள தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணைபோகும் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »