மாயமான மலேசிய விமானம் குறித்து ரஷ்யா புது தகவலை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் திகதி மாயமான மர்மமான முறையில் மாயமானது.
பல்வேறு தேடுதல் வேட்டைக்குப் பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்தவர்கள் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்த இடத்தை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இவ்விமானத்தை பயங்கரவாதிகள் பயணிகளுடன் கடத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மறைவிடத்தில் வைத்திருப்பதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.
Social Buttons