Latest News

April 20, 2014

கப்பலில் இருந்து ஐந்து நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட 5 வயது குழந்தை !
by admin - 0

கடந்த புதன்கிழமை 470 பயணிகளுடன் சென்ற Ferry என்ற தென்கொரிய கப்பல் கடலில் கவிழந்ததில் அந்த நாடே சோகத்தில் இருக்கின்றது. 179 பயணிகள் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேர்கள் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. மீதியுள்ள பயணிகளின் கதி என்ன என்றே தெரியவில்லை. இதில் 100 பள்ளி மாணவர்களும் அடங்குவர். இந்நிலையில் நேற்று ஆறு வயது சிறுமி ஒருவரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கப்பலின் உள்ளே இருட்டு அறை ஒன்றில் மயக்கமடைந்து இருந்த அந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



தற்போது கண்விழித்த அந்த சிறுமி, தன்னுடைய பெயர் Kwon Ji-Yeon என்றும் தன்னுடைய அப்பா, அம்மா, மற்றும் சகோதரருடன் தான் இன்பச்சுற்றுலா சென்றதாகவும், அந்த சமயத்தில் கப்பல் திடீரென கவிழ்ந்ததாகவும் அழுதுகொண்டே கூறினார். இதில் ஒரு பெரிய சோகம் என்னவென்றால் இதுவரை இந்த சிறுமியின் தாய், தந்தை, சகோதரரின் கதி என்னவென்று தெரியவில்லை. Kwon Ji-Yeon என்ற இந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதால் இன்னும் பலர் அந்த கப்பலில் உயிருடன் இருக்கக்கூடும் என்றே மீட்புப்படையினர் முடிவு செய்துள்ளனர். இன்று முதல் மேலும் இரண்டு மீட்புக்குழுக்கள் மீட்புப்பணியில் இறங்கியுள்ளது.

« PREV
NEXT »