Latest News

April 29, 2014

மோடி, சோனியா, அத்வானி தொகுதிகளில் நாளை தேர்தல்- 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு!!
by admin - 0

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங், முரளிமனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது. லோக்சபாவுக்கு இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 7-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் இத்தேர்தல் நடைபெறுகிறது.


குஜராத்தில் 26 தொகுதிகள்.. 

குஜராத்தில் 26 தொகுதிகளிலும், 
ஆந்திராவில் 17, உத்தரப்பிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

பீகார், ஜம்மு காஷ்மீரில்.. பீகாரில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. சோனியா. மோடி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, நரேந்திர மோடி போட்டியிடும் குஜராத்தின் வதோதரா, அத்வானி போட்டியிடும் காந்திநகர், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ, மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா போட்டியிடும் ஸ்ரீநகர் ஆகியவை நாளை தேர்தல் நடைபெறும் முக்கிய தொகுதிகளாகும். முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி இதேபோல் நாளைய தேர்தலை எதிர்கொள்ளும் பிரபலங்களில் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷியும் உமாபாரதியும் அடங்கும். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்கும் நாளை தேர்தலை எதிர்கொள்கின்றனர். சரத் யாதவ், கீர்த்தி ஆசாத் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், பாஜகவின் கீர்த்தி ஆசாத் ஆகியோர் போட்டியிடும் பீகாரின் மாதேபுரா, தர்பங்கா தொகுதிகளிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

தெலுங்கானா தேர்தல் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில் தெலுங்கானா சட்டசபைக்கும் நாளைதான் முதல் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 119 சட்டசபை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 17 லோக்சபா தொகுதிகள் அதேபோல் தெலுங்கானாவின் 17 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சந்திரசேகர் ராவ், விஜயசாந்தி தெலுங்கானாவில் நாளைய தேர்தலை சந்திரசேகர் ராவ், அவரது மகள் கவிதா, நடிகை விஜயசாந்தி என ஏகப்பட்ட பிரபலங்கள் எதிர்கொள்ள இருக்கின்றனர். சந்திரசேகர் ராவ் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளில் இரண்டிலும் போட்டியிடுகிறார். விஜயசாந்தி மேடக் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நாளைய வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




« PREV
NEXT »