Latest News

April 02, 2014

துயர் பகிர்கின்றோம்
by admin - 0

வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டகாடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) 30,03.2014 அன்று வவுனியா மாமடு குளத்தில் ஏற்பட்ட படகு விபத்தின்போது உயிரிழந்துள்ளார். ஜான்சி எமது ஊடக அமைப்பின் .வவுனியா மாவட்ட செய்தியாளரும்,எமது வன்னி வலம்புரி இணையத்தள உதவி ஆசிரியரும்,2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரிச்சார்த்த சேவையாக வவுனியா மண்ணில்
ஆரம்பிக்கப்பட்ட அக்கினி fm வானொலியின் அறிவிப்பாளரும் ஆவார் மற்றும்
இவர் இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய இதர பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் எமது ஊடகவியலாளரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோருக்கு எமது ஊடகஅமைப்பின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன் பிரிவின் துயரத்தில்
உன் உருவம் காண்பதற்காக
காலன் அவன் ஆசை கொண்டானோ
உன் பாசம் தனில் காத்து சென்றானோ 
காத்திருக்கின்றோம் மீண்டும் நீ வருவாயென...
நீக்கம் மறந்து நிறைந்திருக்கும் 
உங்கள் நினைவுகளோடும் 
எம்மை தவிக்கவிட்டு சென்றாயே
உறவுகள் புலம்புகின்றனர்
உலகமே இருண்டு போனது
உணர்வே மருண்டு போனது
உன் முகம் காணவில்லையே
எங்குதான் போனாயோ
பிரிவுகளால் வலிகள் தந்தாயே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
உன் புன்னகை காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
காலங்கள் தேய்ந்திடினும்
உன் நினைவுகள் அழிந்திடுமோ
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.

தலைவர்,செயலாளர்,ஊடக அமைப்பின் உறுப்பினர்கள் 
ஊடகவியலாளர்கள். 
இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 
வவுனியமாவட்டம்.
« PREV
NEXT »