விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்க நீதிமன்று உத்தரவு! கடந்த 13ம் திகதி தர்மபுரம்
முசுறன்பிட்டி பகுதியில் கைதான
சிறுமி விபூசிகாவை வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருக்கக் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் பணித்துள்ளது. இன்று17 03 2014 பிற்பகல் , கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் வரப்பட்ட
விபூசிகாவை பொறுப்பேற்க பல சிறுவர் இல்லங்கள் முன்வந்த போதும், நீதவான் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் தங்க அவரை அனுமதித்துள்ளார். மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளினால் சிபாரிசு செய்யப்பட்டபோதிலும்,
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதாலும், விபூசிகாவும் அண்மையில் பூப்படைந்த சிறுமி என்பதாலும், பெண்களின் பராமரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றும்
அனுமதிதுள்ளது. இதனைத்
தொடர்ந்து விபூசிகா அருட்சகோதரிகளால்
அவர்களது பராமரிப்பினிலுள்ள
வவுனியா அன்பகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். நீதிமன்றில் விபூசிகா விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அனைத்து சட்டத்தரணிகள் அனைவரும் அவரிற்கு ஆதரவாக
தாங்களே முன்வந்து வாதங்களை முன்வைத்திருந்தனர்.
No comments
Post a Comment