Latest News

March 16, 2014

ஜெயக்குமாரியின் கைதை எதிர்த்து த.தே.ம.மு தலைமையில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

கிளிநொச்சி தர்மபுரம் முசிலம்பிட்டி கிராமத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா 13.03.2014 ஆகியோர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரது கைதுகளை கண்டித்தும் பாலேந்திரன் ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று (15.03.2014) வவுனியா பேரூந்து தரிப்பு நிலையம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் த.தே.ம.முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளர் கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இது தொடர்பாக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் த.தே.ம.மு செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஆனந்தராஜா, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதராகலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன்,மருத்துவர் சிவமோகன் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகபேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான பாஸ்கரா, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், காணாமல் போனோர் தேடுதல் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஸ்ணன், காணாமல் போனோர் சங்கத்தின் அமைப்பாளர் பிறீட்டோ, மன்னார் அருட்தந்தை செபமாலை உட்பட மதகுருமார்கள், அருட்சகோதரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.










« PREV
NEXT »